போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் இவ்வருடம் 36 ஆயிரத்து 67 பேர் கைது!
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைதுசெய்யப்பட்டனர் கலால் வரி திணைக்களம் இன்று தெரிவித்தது.
சட்டவிரோதமான முறையில் ஸ்பிரிட் உற்பத்தி செய்தமை அதனை வைத்திருந்தமை மற்றும் கொண்டுசென்றமை தொடர்பில் 18 ஆயிரத்து 572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 296 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 40 கோடி ரூபா என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர் 11 கோடி 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது என்றும் கலால் வரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.