சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு….

ஒகஸ்ட் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாக, இலங்கைக்கு தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஜனவரி முதல் இன்று வரை சுமார் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 200,000 வருகையை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், ஆண்டின் இறுதியில் (2021) குறைந்தபட்சம் 175,000 முதல் 185,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.