யானை தாக்கி வயோதிபர் பரிதாப மரணம்!

யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி, வெலிகேபொல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வீட்டின் வளாகத்தில் இருக்கும்போதே அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக வெலிகேபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெலிகேபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.