நாட்டில் விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்!

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை ஜே.வி.பி. நடத்துகின்றது.
அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நுவரெலியா, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய நகரங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், புத்தளம், ரிகிலகஸ்கட, பூண்டுலோயா, கதுறுவெல மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நாளை போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.