டிஜிட்டல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்….
டிஜிட்டல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் அரம்பிக்கப்பட்டுள்ளது. Lighting Digital Capacity Building Drive என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் ( ICTA ) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விரிவான வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டில் டிஜிட்டல் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அமைவாக இலங்கையின் கல்வி துறை, அரச பிரிவு மற்றும் பிரஜைகளின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி பல வேதைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திரு.ஜயந்த டி சில்வா, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் தலைவர் திரு. ஓஷத சேனாநாயக்க அதன் பிரதான நிறைவுற்று அதிகாரி பொறியியலாளர் திரு.மஹிந்த பீ ஹேரத் உள்ளிட்ட தனியார் மற்றும் அரச துறையைச் சார்ந்த விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான வைபவம் கடந்த 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் ( ICTA ) வினைத்திறமிக்க Smart தேசியத்தை கட்டியெழுப்பும் தேசிய தொலைநோக்கிற்கு அமைவாக அரச துறைகளில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி இலங்கையில் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் தொலைநோக்குடன் செயற்படுகின்றது.
இதன் மூலம் செயல்திறன் மிக்க மற்றும் பயனுள்ள அரச சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்படுவதுடன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சமூகத்திற்கு பொருத்தமாக மனிதவள செயலணியை உருவாக்குவதற்காக செயல்திறன்மிக்க Smart கல்வி முறை ஒன்றை ஏற்படுத்தல் மற்றும் டிஜிட்டல் சமூகம் பயன்களை பெற்றுக்கொள்வதற்காக பிரஜைகளை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகின்றது. Lighting Digital Capacity Building Drive என்ற வேலைத்திட்டத்தின் மூலம் அதற்காக அர்ப்பணித்த வளவாளர்கள் மற்றும் அரச மற்றும் தனியார் துறை பங்காளர் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
இதன் போது கல்வி துறையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளில் டிஜிட்டல் கல்வி கொள்கை மற்றும் முக்கிய திட்டம், உயர் கல்விக்காக மேம்படுத்தும் வேலைத்திட்டம், டிஜிட்டல் கல்விக்காக தொழிற்சாலைகளுடனான உள்ளக செயற்பாடு வலைப்பின்னல் ஒன்று அமைக்கப்படும். இதே போன்று தேசிய திறன் கட்டமைப்பு மற்றும் அதற்கான அரங்குகள் போன்றவற்றை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை மற்றும் அவற்கு அமைவாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் ( ICTA ) ஆற்றல்களை மேம்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன். இதன்மூலம் அனைத்து தரங்களிலுமான மனித வள செயலணி வலுவூட்டப்படும். இந்த வேலைத்திட்ங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அரச துறை நிறுவகங்களில் உள்ள பிரதான டிஜிட்டல் தகவல் அதிகாரிகளின் செயற்பாடுகள் ( CDIO ) வலுவூட்டப்படும். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் ( ICTA ) அரசாங்கத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் செயற்பாடு மாதிரி அவர்களது டிஜிட்டல் அரச மேபாட்டு முயற்சியை வெற்றி பெறுவதற்கு மற்றுமொரு வழியாக அமையும். NextGenGov என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் அரச அதிகாரிகளை துரிதமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செயற்பாடுகளில் உட்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுடப் செயல் திறனை பயன்படுத்தி பிரஜைகளின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு ICTA மேற்கொள்ளும் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளனர். தேசிய டிஜிட்டல் பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் தொழில் நுட்பம் அதிகரிப்பதுடன் டிஜிட்டல் மனிதவள செயலணியில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் டிஜிட்டல் ஆற்றல் உள்ள மற்றும் முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அரசாங்கம், தொழில்துறை சார்ந்த சங்கங்கள், தனியார் துறை சமூகத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் மேலும் பல தர்ப்பினரைக் கொண்ட குழுக்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் ( ICTA ) அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.