தமிழகத்தில் இரவு நேர ஊடரங்கிற்கு வாய்ப்பில்லை… முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
கொரோனா மற்றும் புதிய ஓமைக்ரான் வேரியண்ட் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல பரிந்துரைகள் பரீசலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் பணி காலம் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், தொற்று அதிகரித்தால் பணியாளர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிப்பு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கால் பயணில்லை..எனவே, பொது இடங்களான வணிக வளாகங்கள், கூட்டம் கூடும் இடங்களில் முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கடுமையாக்கவும், அபராதம் வசூலிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்ய வலியுறுத்தல்.
ஓமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டம்
விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்துவது குறித்த வழிக்காட்டுதல்கள் முறைப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
ஓமைக்ரான் தொற்று வேகமாக இருக்கும் நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பினும், தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் போன்றவை ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.