பிள்ளைகளுக்கு புதிய கற்றல் முறைகள்…

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் பங்கேற்றார். புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் கூறினார்.

அறிவு மற்றும் தரவுகளுடன் விடயங்களைத் தீர்மானிக்கும் யுகம் தற்போது உருவாகியுள்ளது. மாற்றமடையும் உலகிற்கேற்ப கல்வி முறையிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை,மக்களை ஜீவனோபாய ரீதியில் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் அவர் கூறினார். கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் சம்பந்தமாக கம்புறுப்பிட்டிய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.