பங்களாதேஷ் பயணிகள் படகு விபத்தில் 36 பேர் பலி.
பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சுகந்தா நதியில் அதிகாலை 3 மணியளவில் படகு தட்டாபியா பகுதியை அடைந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் படகு மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி 2 மணி நேரத்தில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்களை ஷெர்-இ-பங்களா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,
அதிகாலை நேரம் கடுமையான பனிமூட்டம் காரணமாக மீட்புப்பணிகள் சிக்கலானது. இந்த தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.