சுனாமி பேரழிவின் நினைவு நாளிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!
2021ம் ஆண்டிற்கான சுனாமி பேரழிவின் நினைவு நாளிற்கான சுனாமி பேரழிவின் நினைவு நாளிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்! தவிசாளர் க.விஜிந்தன் அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஒவ்வொரு வருடத்தினைப் போலவும் 26ம் திகதி காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு சுனாமி நினைவாலையத்தில் இஸ்லாமிய, இந்து சமய வழிபாடுகளைத் தொடர்ந்து கத்தோலிக்க மதத்தினருடைய திருப்பலி பூஜை நடைபெறும் எனவும் அத்துடன் மாலை 5.05 க்கு முள்ளியவளை கயட்டை பிரதேசத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெறும் என முடிவெட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அஞ்சலிக்கான போக்குவரத்தினை தனியார் போக்குவரத்து கழகம் இலவசமாக ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 3.30 க்கு பேரூந்து முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம் ஆகிய கிராம மக்களுக்கான தனியான சேவையையும், முல்லைத்தீவு பகுதியை அண்டிய பகுதி மக்களுக்காக தனியான பேரூந்து சேவையையும் மற்றும் கள்ளப்பாடு, தீர்த்தக்கரை கிராம மக்களுக்கு தனியான பேரூந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர், முல்லைப் பங்குத்தந்தை, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், வர்த்தக சங்க அமைப்பினர், போக்குவரத்து சபையினர், பொது அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.