திருக்கோவில் துப்பாக்கி சூடு : 4 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு.

அம்பாறை −திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அம்பாறை −திருக்கோவில் பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார். அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததோடு 3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.