உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது – பிரதமர் மோடி
ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நேரத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்று தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கி உள்ளது. நாம் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவது என்பதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவயைில்லை. இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயராக உள்ளன. குழந்தைகளுக்கு 90,000 கொரோனா படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்ஜிஸன் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்தும் திட்டம் பாதுகாப்பாக செய்யப்பட்டு வருகிறது. உலகின் முதல் டிஏன்ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.