வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம்….

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகின்ற அனைவருக்கும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்ற புதிய செய்தி வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 39 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த புதிய முடிவு. சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சற்றுமுன் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார்.
முதல்கட்டமாக Home Quarantine என்றும் வரும் நாட்களில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் படி முடிவு மாறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Risk country, Non-Risk Country அனைவருக்குமே இந்த முடிவு பொருந்தும். எனவே வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்ற நபர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறி்ப்பிடத்தக்கது.