பொருள்களின் விலை அதிகரிப்பை எவ்வழியாலும் தடுக்கவே முடியாது!
“நாட்டில் பொருள்களின் விலை அதிகரிப்பை எந்த நடவடிக்கைகளாலும் தடுக்கவே முடியாது. பொருள்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவானதல்ல.”
இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச ரீதியில் சில பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனால்தான் வரி குறைக்கப்பட்ட போதிலும் விலை அதிகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
பொருள்களின் விலை அதிகரிப்பால் மக்கள் வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம்.
தற்போது மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பை விட இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே சிறந்த விடயம்.
உரப் பிரச்சினை மற்றும் காலநிலை நிலைமை காரணமாக உணவுப் பொருள்களில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது” – என்றார்.