துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் சிக்கினார்!

விசேட சோதனை நடவடிக்கையின்போது அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காலி, வதுரும்ப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தலாவ, வதுரும்ப பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஏழு தோட்டாக்கள், 4 லீற்றர் மதுபானம், 168 லீற்றர் கோடா என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.