ரயில் வேலை நிறுத்தம் தீவிரமாகிறது! எண்ணெய்-சீமேந்து -மாவு கொண்டு செல்லவது இன்று முதல் நிறுத்தம்!
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRMA) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள், சீமெந்து மற்றும் மாவு போக்குவரத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன (SLRSMU) தெரிவித்தார்.
இன்று மாலை ரயில்வே பொது மேலாளருடன் (ஜிஎம்ஆர்) நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புகையிரத பயணச்சீட்டு வழங்காமை மற்றும் பொதிகளை ஏற்று கொண்டு செல்லாமை போன்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு மேலதிகமாக இந்த சேவைகளில் இருந்தும் விலகிக்கொண்டதாக சுமேத சோமரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஜூனியர் ரயில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், பணிகள் சிரமத்துடன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் புதியவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.