விபத்துக்குள்ளான சகுராய் விமான நிறுவன விமானங்கள் பறக்க தடை

தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் தரையிறங்கிய விமானத்தின் சகுராய் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் இடைநிறுத்துவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை (CAA) துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான சேவையின் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் என சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று கடந்த 22ஆம் திகதி பயாகலவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதில் பயணித்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.