மகிந்த திருப்பதி சென்ற விமானம் நண்பர் ஒருவர் கொடுத்தது.. பெயரை சொல்ல முடியாது : யோஷித ராஜபக்ஷ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அண்மையில் இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விமானம் இந்தியாவின் வர்த்தக நண்பர் ஒருவரால் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தெரிவித்தார்.
விமானம் வழங்கப்படுவது நல்லெண்ணத்தின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.
அந்த விமானத்தின் சராசரி கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு $ 6700 ஆகும்.