காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ‘காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு’
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ‘காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு’ என்ற வேலைத்திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் கம்பஹா, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில், பல வருடங்கள் பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு நேற்றுமுன்தினமும் (27) நேற்றும் (28) காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி மாவட்டத்தில் 300 பேருக்கும், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 500 பேருக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வீட்டு வாசலுக்கே காணி உறுதிப்பத்திரம்’ திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 3000க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல வருடங்களாக பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பதிரங்கள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்குடன், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டு (2021) ஐயாயிரம் உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டம், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, தற்போது 20 மாவட்டங்களில் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் 5,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.