கடற்கரையில் உயிருடன் கரையொதுங்கிய கடலாமை.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் உயிருடன் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 3 அடி வரையான சுமார் 150 கிலோ எடையுடைய கடலாமை ஒன்று புதன்கிழமை (29) இரவு உயிருடன் கரையொதிங்கியுள்ளதாக நிந்தவூர் வெளவால் ஓடை மீனவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள் பொது சுகாதார பரிசோதகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் உயிருடன் கடலாமைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் அம்பாறை மாவட்ட கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் மேற்கூறிய கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றிருந்தனர்.