இலங்கை மத்திய வங்கி நேற்று மட்டும் 202 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது!
இலங்கை மத்திய வங்கி நேற்று (29) 202 பில்லியன் ரூபா பணமாக அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.
அக்டோபர் 14-ம் தேதிக்குப் பிறகு பணம் அச்சிடப்படுவது இதுவே முதல்முறை.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி நேற்று 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைப்பத்திரங்களை வெளியிட்ட போதிலும், 33.5 பில்லியன் ரூபாவையே விற்பனை செய்ய முடிந்தது.
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.விஜேவர்தன , வட்டி விகிதங்கள் மற்றும் மாற்று விகிதங்களை தொடர்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.