அமெரிக்காவில் கைமீறிப்போன நிலைமை.. ஒரே நாளில் 5.5 லட்சம் ஓமிக்ரான் தொற்று.
நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 565,987 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக தினசரி கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,868,915 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 286,806,155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6,758 பேர் உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 845,737 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது 28,212,994 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
அமெரிக்காதான் தற்போது உலக அளவில் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு அதிக அளவிலான நபர்களுக்கு இரண்டு டோஸ் வேக்சின் போட்டும் கூட கேஸ்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் தினமும் 4-5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 565,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்தமாக 55,246,781 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 845,737 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1354 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 41,467,660 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 12,933,384 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.