இந்தியாவின் வேளாண் பொருள் ஏற்றுமதி சீராக அதிகரிப்பு

உலகளாவிய வா்த்தகத்தில் பல சவால்களை சந்தித்த போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வோளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சீராக வளா்ச்சியடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளா்ச்சி வாரியம்(அபெடா) மூலம் வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2011-12ஆம் நிதியாண்டில் ரூ.83,484 கோடியாக இருந்த, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 2020-21ம் ஆண்டில் ரூ.1,53,050 கோடியாக அதிகரித்துள்ளதாக வா்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்ககம் தெரிவித்துள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத அரிசி முன்னணியில் உள்ளது. 2020-21ஆம் ஆண்டு மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்காக அரிசி உள்ளது.

2020-21ஆம் ஆண்டில் அபெடா ஏற்றுமதியில் முதல் 3 பொருட்களில் பாஸ்மதி அல்லாத அரிசி (23.22%) பாஸ்மதி அரிசி (19.44%) மற்றும் எருமை இறைச்சி (15.34%)ஆகும். இவை மூன்றும் மொத்த ஏற்றுமதியில் 58 சதவீதம் வகிக்கின்றன.

2020-21ம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் மதிப்பு ரூ.35,477 கோடி. பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி ரூ.29,850 கோடி. எருமை இறைச்சி ஏற்றுமதி ரூ.23,460 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.