உத்தரப் பிரதேச தொழிலதிபரிடம் 200 கோடி சிக்கிய சம்பவம்..தமிழகத்திலும் தொடரும் வருமான வரித்துறை சோதனை

உத்தரப் பிரதேஷம் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையின் ஒருபகுதியாக அவருக்கு சொந்தமான நிலக்கோட்டையில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் பெருமளவு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த வாரம் அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் உத்தரப் பிரதேச மாநில தொழிலதிபரும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி.யுமான புஷ்பராஜ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 50 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள புஷ்பராஜ் ஜெயினுக்கு சொந்தமான சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய ஒரு வாசனை திரவியம் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்த புகாரில் கான்பூர், மும்பை, சூரத் நகரிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.