நாடு திரும்பிய பஸில் அதிரடி : கைமாறுகின்ற ஆறு அமைச்சுகள்!

முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது.
அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார். எனவே, இன்னும் ஒரிரு நாட்களில் இந்த மாற்றம் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதன்போதே முக்கிய ஆறு அமைச்சர்களின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன.
அதேவேளை, சில இராஜாங்க அமைச்சுகளும் மாறவுள்ளன என்று தெரியவருகின்றது.
இது தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி வருகின்றார் எனவும் அறியமுடிந்தது.