நைஜீரியாவில் கடத்தல்காரர்கள் 10 பேர் சுட்டுக்கொலை.

அங்கு ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய பல்வேறு ஆயுத குழுக்கள் மாணவ-மாணவிகளை கடத்தி வைத்துக்கொண்டு அவர்களின் பொற்றோரிடம் இருந்து பிணை தொகை பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆள்கடத்தல்காரர்களை வேட்டையாட ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நைஜீரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஓச்சான் என்கிற வனப்பகுதிக்குள் கடத்தல்காரர்கள் பலர் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், பதுங்கியிருந்த கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் கடத்தல்காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் சில கடத்தல்காரர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பி ஓடி விட்டனர்.