தனியார் வங்கியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளம் யுவதி காயம்!

கொழும்பு, நாரம்மல பகுதியிலுள்ள தனியார் வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
தனியார் வங்கியில் கடமையாற்றும் 20 வயதான யுவதியே இவ்வாறு காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த யுவதி, குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வங்கியின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.
மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.