டொலர் பிரச்னையால் அத்தியாவசிய மருந்துகளுக்கு பிரச்னை வரலாம்!
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நிலைமையில் இருந்து மீள்வதற்கு கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, அனைவரது ஆரோக்கியத்திலும் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.