இயற்கை உரம் பாவித்து தக்காளி செய்கை, 1 கோடி ரூபா வருமானம்…
இரசாயன உரம் 30 வீதமும், 70 வீதம் இயற்கை உரமும் பாவித்து மூன்றரை ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளபட்ட தக்காளி பயிர்ச்சைய்கையில் ஒரு பருவத்தில் 1 கோடி ரூபா வருமானம் கிடைத்தது என விவசாயில் ஒருவர் தெரிவிததுள்ளார்.
கலேவெல பட்டிவெல பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான எஸ்.ரத்னபால இந்த வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுள்ளார். தற்போது இயற்கை கரிம உரங்கள், இரசாயன உரங்கள் மற்றும் இதர பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிக அனுபவம் கொண்ட ரத்னபால, தக்காளிச் செய்கைக்கு மேலதிகமாக சுமார் 6 ஏக்கரில் மஞ்சள் சாகுபடியையும் மேற்கொண்டு வருகிறார்.
விவசாயத் திணைக்களத்தின் மதிப்பீட்டை விட தக்காளியில் அதிக மகசூல் கிடைப்பதாக பல வருடங்களாக இயற்கை விவசாயத்தில் பயிர்ச்செய்கை செய்து வரும் ரத்னபால தெரிவித்தார்.
அந்த விளைச்சலைப் பெறுவதற்கு முக்கியக் காரணம் தனது நிலம் இயற்கை உரத்திற்கு பழக்கப்பட்டதே என்கிறார் இவர். மேலும், அறுவடை முடிந்து தக்காளிக்கு மீண்டும் தண்ணீர், உரம் பாய்ச்சுவதால், தக்காளி மரங்களில் இலைகள் துளிர்விட்டு, மீண்டும் அடுத்த அறுவடைக்கு பூத்துள்ளன என தெரிவித்தார்.
எனது முறை வெற்றிகரமானது என ரத்னபால குறிப்பிடுகிறார். 100% இயற்கை சேதன உரங்களைக் கொண்டு மாத்திரம் மரக்கறிச் செய்கையை மேற்கொள்ள முடியாது எனவும் 30% இரசாயன உரங்கள் கட்டாயம் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தக்காளித் தோட்டத்தின் இளம் இலைகள் மற்றும் பூக்களை சேதப்படுத்திய இனந்தெரியாத புழுவால் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புழுக்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த திட்டமும் இல்லை என்றும், வேளாண் அதிகாரிகளுக்கும், ஆராய்ச்சி பிரிவுகளுக்கும் கூட புழுக்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.