பஷில் ராஜபக்க்ஷ சற்றுமுன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய விசேட அறிவிப்பு.
? 2022 ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு,
?இம் மாதம் முதல் (ஜனவரி) சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கப்படும்.
?அரச ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் சிறப்பு உதவித்தொகையாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.
?அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
?மாதம் 15 கிலோ கோதுமை மா ஒவ்வொரு தோட்ட குடும்பத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 80 ரூபா படி வழங்கப்படும் .
? இரண்டு பரப்புக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு 5000 ரூபா வழங்கப்படும்.
? மஹா போகத்தில் இருந்து ஒரு கிலோ நெல் ரூ. 75 க்கு கொள்முதல் செய்யப்படும்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார். வரி கட்டமைப்புகளை மாற்றுவதைத் தவிர்க்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், இந்த நிவாரணம் 2022 வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் சுமார் 229 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.