முன்னறிவித்தலின்றி நான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியினால் தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ஊடகங்கள் ஊடாகவே தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
“சமீபத்தில் நான் சந்தையில் இருந்தபோது, ஒரு ஊடகவியலாளர் என்னிடம் பொருட்களின் விலை பற்றி கேட்டார். அதனால், விவசாயம் தோல்வியடைந்து, கொள்கை முடிவுகளும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்துடன், மக்கள் சார்பாக கருத்து வெளியிட்டேன்.
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில விடயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு எவ்வாறு நகர்ந்து வருகின்றது என்பதனைக் கருத்தில் கொண்டு, பதவிகள் பறிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாட்டின் எதிர்கால அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையும்.
நாளை முதல் தனது சட்டத்தரணிப் பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நாளையிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்லும் தொழில் எனக்கு உள்ளது என்றார்.