டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை.

மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஏற்படும் மிகவும் அரிதான நிகழ்வாகும்.வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படும்போது கடல் அல்லது ஏரி போன்றவற்றின் மேற்பரப்பில் திடீரென காற்று சூடாகும் போது அது விரைந்து மேலெழும்புகிறது. அவ்வாறு காற்று மேலெழும்பும் போது அந்த வெற்றிடத்தை நோக்கி கடல்நீர் எழும்பி வரும்.
அப்போது கடல் பரப்பில் இருக்கும் தவளைகள் மீன்கள் சிப்பிகள் போன்றவை நீருடன் சேர்ந்து மேலெழும்பி காற்றுடன் பயணப்பட்டு சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்கள் மழையாய் பொழியும். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே சிங்கப்பூர் பிரான்ஸ் ஈரான் ஆகிய பகுதிகளில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ள நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இது போன்ற மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக் கண்டு அங்கு வசித்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து டெக்சாஸின் இந்த சிட்டி ஆப் டெக்சர்கானாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு டெக்சர்கானாவில் மீன் மழை பொழிவது, பல வினோத உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளது எனக் கூறி உள்ளது.