2022ல் கொரோனாவுக்கு முடிவு உலக சுகாதார அமைப்பு உறுதி.

தடுப்பூசியில் சமத்துவம் இல்லாத நிலையை போக்கினால் கொரோனா பரவலை 2022ல் முடிவுக்கு கொண்டு வரமுடியும்,” என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறியதாவது:பெருந்தொற்று பரவலின் மூன்றாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். சுகாதாரத் துறையில் பல ஆண்டுளாக முயன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு இந்த தொற்று பெரும் சவாலை விடுத்துள்ளது.

வழக்கமான தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டது மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கான தொடர் சிகிச்சைகளை எடுக்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் ‘டெல்டா’ மற்றும் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்றுகள் சுனாமியை போல பரவி வருகின்றன. இது மருத்துவத்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துஉள்ளன.கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க இந்த புத்தாண்டில் நம் சபதம் ஏற்க வேண்டும்.நடப்பாண்டு 2022ல் உலகின் அனைத்து நாடுகளிலும் 70 சதவீத மக்களை தடுப்பூசி சென்றடைய வேண்டும். அப்போது தான் தொற்று பரவலை ஒழிக்க முடியும்.தடுப்பூசியில் சமத்துவம் வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழி செய்யாமல் அதை தங்கள் வசமே சில நாடுகள் வைத்திருந்தால் தொற்று பரவலை ஒழிக்க முடியாது.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்க வழி செய்தால் 2022ல் கொரோனாவை ஒழித்துவிட முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.