தகைமையற்ற வேடதாரிகளுக்கு கல்வியின் பெறுமதி தெரியாது! பதிலடி கொடுத்தார் சுசில்.
“நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி நீக்கம் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலைச் செய்வேன்.”
இவ்வாறு பதவி விலக்கப்பட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறியதாவது:-
”பதவி நீக்கம் பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் ஊடாகவே அறிந்தேன். நான் 2000ஆம் ஆண்டிலிருந்து அமைச்சுப் பதவியை வகித்து வருகின்றேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன்.
நான் சட்டத்தரணி. இனி அந்தத் தொழிலை முன்னெடுப்பேன். தகுதியானவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். தகைமையற்ற வேடதாரிகளுக்குக் கல்வியின் பெறுமதி தெரியாது” – என்றார்.