இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு ஜீப் வண்டிகளைக் கொள்வனவு செய்தல்….
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் ( Indian Line of Credit ) கீழ் கொள்வனவு செய்வதற்காக 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளிடம் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் மஹேந்திரா மற்றும் மஹேந்திரா கம்பனிக்கு வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.