யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி…..
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறையும் 12 ஆவது முறையாக நடைபெறவுள்ளது.
கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச வர்த்த பேரவை மற்றும் இந்தியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்த ஆலோசனை நாயகத்தினாலும் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்பத்திகளை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையவுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வர்த்தக நடவடிக்கையாக இக் கண்காட்சி அமையவுள்ளது.
பல்லின வர்த்தக தொழில் துறைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள இக் கண்காட்சியில் குறிப்பாக விவசாயம், வைத்தியசாலை, உணவு மற்றும் இயந்திரம், கட்டுமானம், இலத்திரனியல் மற்றும் காணி தொடர்பிலான பொருட்கள் சேவைகள் போன்றன கூடங்கள் காட்சிப் படுத்தப்படவுள்ளன.
இந்த கண்காட்சி யாழ்ப்பாண சந்தையின் பெரும்பகுதியை அடைவதற்கான சந்தர்ப்பாக அமையவுள்ளது. கடந்த முறை இடம்பெற்ற கண்காட்சியின் போது சுமார் 50,000 பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள சந்தை வாய்ப்புக்களை பெறுவதற்கான சந்தர்ப்பமாக அமையவுள்ள இக் கண்காட்சினை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர் பயன்படுத்த முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் தமது தொழில் துறையை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைத்துள்ளது. தமது தொழில் துறை அறிவை மேம்படுத்துவதற்கும் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்கும் இக் கண்காட்சி பெரும் சந்தர்ப்பமாக அமையும்.
நீண்டகாலமாக உயர் கல்வி பெரும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் கல்வி என்னும் தலைப்பில் பல உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் இக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.jitf.lk என்ற இணையத்தளம் மூலம் அல்லது 077 1093792 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.