சிறுமியிடம் சில்மிஷம் செய்த மதபோதகர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (வயது 31). இவர் அதே பகுதியில் தங்கி மத போதனை செய்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் பிரார்த்தனைக்காக வந்து சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக 16 வயது சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே சாமுவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, நேற்று முன்தினம் சாமுவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்பு உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.