12 ஆண்டுகளுக்கு பிறகு.. கடனை திருப்பி கொடுக்க கடல் கடந்து வந்த இளைஞர்! ஒரு சுவாரஸ்ய தகவல்

இளைஞர் ஒருவர் வேர்க்கடலை வியாபாரிடம் இருந்து வாங்கிய 25 ரூபாய் கடனை 12 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்துள்ள சம்பவம் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது மகன் பிரவீனை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வியாபாரி ஒருவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்று கொண்டிருந்தார்.
மோகன் தனது மகனுக்கு 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அப்போது அவரிடம் கொடுக்க பணமில்லை. இந்நிலையில் அந்த வியாபாரி மறுநாள் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் அதன் பின் மோகன் மற்றும் அவரது குடும்பம் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். இதற்கிடையே பிரவீன் எப்படியாவது 25 ரூபாய் கடனை அடைத்துவிட எண்ணினார். இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும் காக்கிநாடா எம்.எல்.ஏ.வுமான சந்திர சேகரிடம் தெரிவித்தார்.
மேலும் அந்த வியாபாரியுடன் எடுத்த புகைப்படத்தை பிரவீன் அனுப்பினார். இதையடுத்து வியாபாரி மற்றும் அவரது மனைவியை எம்.எல்.ஏ. வீட்டுக்கு பிரவீன் வரவழைத்தார்.
அவரிடம் பிரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 25 ரூபாயுடன் வட்டியோடு சேர்த்து 23 ஆயிரமாக திருப்பி கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.