மணி அணியும் குமாருக்கு அஞ்சலி!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்துக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணியும் அஞ்சலி செலுத்தியுள்ளது.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றாகும்.
இதையடுத்து யாழ்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடமொன்றில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் குமாரின் உருவப்படத்துக்குச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.