லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு….
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரைவுப்படுத்த தற்போதைய நிலையில் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்பி எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களிலும் இன்றும் 220,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் நுகர்வோருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளாந்த LP எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் தினங்களில் நாள் ஒன்றுக்கு 90,000-100,000 வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதற்கு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறுகிய காலத்தில் களையப்படும் என குறித்த நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.