‘மொட்டு’ கூட்டு அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?
“அரசுக்குள் ஒழுக்கமாக இருக்க முடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.
மாத்தளையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டித்தார்.
நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அரசு மீது அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘மொட்டு’ கட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அவரை அரசில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.