நீர் நிலை உயிர்க் காப்பு பயிற்சியில் சித்தியடைந்தோர் மதிப்பளிப்பு!
அவுஸ்ரேலியா உயிர்காப்பு கழகத்தின் ஏற்பாட்டில், அமெரிக்க துணைத்தூதரகத்தின் அனுசரனையுடன் வடமாகாணத்தில் முதன்முறையாக யாழ் காரைநகர் கோட்டை கடற்பரப்பில் சர்வதேச தர நீர்நிலை உயிர்காப்பு தெரிவுப் பயிற்சிநெறி 21நாட்கள் இடம்பெற்றிருந்தது.
குறித்த பயிற்சியில் மாவட்ட விளையாட்டுப்பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திம்பிலி கிராமத்தை சேர்ந்த க.நிரோசன், முத்தயன் கட்டைச் சேர்ந்த ரா.லஜிதன், நாயாறு கிராமத்தைச் சேர்ந்த கு.ஆனந்தபிரசாந், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சி.ஸ்ரீஜன்னன் ஆகியோர் குறித்த பயிற்சியினை நிறைவு செய்து அதிதிறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களை பாராட்டி மதிப்பளிக்கும் முகமாக இன்று(06) காலை 10.00மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
குறித்த பயிற்சியில் வடமாகாணத்தில் அதிதிறமையை வெளிப்படுத்திய 16 வீரர்களில் நான்கு பேர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.