மத்திய வங்கி கையிருப்பில் இருந்த தங்கத்தின் பாதியை ரகசியமாக விற்ற அரசு ! $382 மில்லியனில் இருந்து $175 ஆக வீழ்ச்சி!
அரசாங்கத்தின்கையிருப்பில் இருந்த தங்கத்தின் பாதியை இலங்கை மத்திய வங்கி விற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் 21, 2021 நிலவரப்படி 382.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்க கையிருப்பு 21 டிசம்பர் 2021 நிலவரப்படி 175.4 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.
இது குறித்து அறிவித்து ஹர்ஷ டி சில்வா விட்டிருந்த ட்விட்டர் செய்தி இது…..
I was right but was wrong on the date. @CBSL SOLD more than half of #SriLanka’s remaining gold reserves. From USD 382m we are now down to just USD 175.4m. Also, no mention of whether CNY 10b (accounted as equivalent to USD 1.5b) can be used for debt repayment. https://t.co/tTNBcjjkAI pic.twitter.com/n0E6SxzhXw
— Harsha de Silva (@HarshadeSilvaMP) January 7, 2022