டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் சதமடித்தார்.
கவாஜா தன் கிரிக்கெட் கேரியரின் இரண்டாவது இன்னிங்ஸில், தான் ஆடிய
லபுசேன் கவாஜாவின் இடத்தை துடுப்பால் அடித்துப் பறித்ததாய்த்தான் நினைத்தேன். ஆனால் “நண்பா கவாஜா நீ நம்பர் பைவ்ல விளையாடு உன் பேட்டிங் ஸ்டைல், கேம் அப்ரோச்சுக்கு அதான் சரியான இடம்”னு வழிக்காட்டி இருக்காருனு இப்ப தோணுது.
பேட்டிங்கில் மூன்றாவது வீரராய் வரும்பொழுது பெரும்பாலும் பந்தின் பளபளப்பு குறைந்திருக்காது. ஆனால் ஐந்தாவது வீரர் எனும் பொழுது எப்படியும் சராசரியாய் அதிகபட்சமாய் முப்பதிலிருந்து குறைந்தபட்சம் பத்து ஓவர்களாவது பழைய பந்தில் ஆட முடிகின்ற வாய்ப்பை அதிகமுறை பெறலாம். ஆடுகளத்தின் தன்மை உணரவும், ஆரம்ப டென்சன் போக்கவும் உதவும். இரண்டாவது புதிய பந்தில் ஆடுகின்ற சூழலில் களத்திற்கு வருகிறோமென்றால், அணி நல்ல ஸ்கோரில் இருக்கிறதென்று அர்த்தம் ஆகையால் பேட்டிங் நெருக்கடி குறைவு.
பாகிஸ்தான், இந்திய டூரில் ஆசிய கன்டிசனில் கொஞ்சம் ரன்களை கவாஜா தேத்திக்கொண்டால், கவாஜா இனி ராஜா!