நாளை முழு ஊரடங்கு… என்ன இயங்கும்? என்ன இயங்காது?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இன்று மட்டும் சுமார் 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவையெல்லாம் செயல்படும்:
மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்
பெட்ரோல் பங்குகள் செயல்படும்
உணவகங்கள் செயல்படும். பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.
அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.
திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம்.
காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும்
புறநகர் ரயில் சேவை செயல்படும்
எவற்றுக்கெல்லாம் தடை:
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.
கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை
மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை