நிதி நெருக்கடியில் இருந்து விடுபட சீனா-ஜப்பான் பக்கம் செல்லும் பசில்!
தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து விடுபட இந்தியாவிடமிருந்து பெறப்படும் நிவாரணப் பொதிகளுக்கு நிகரான நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பானில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 பக்கங்கள் கொண்ட இந்தப் பிரேரணையின் ஊடாக, அதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கத் தயார் என நிதியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இலங்கை ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து 20% கடனைப் பெற்றுள்ளதாகவும், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்து இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.