மைத்திரியின் பேச்சுகளுக்கு பின் ஈஸ்டர் கோப்புகளை தூசி தட்டி எடுக்க அரசு முடிவு
ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தாலும் அடுத்த சில வருடங்களுக்கு அரசாங்கம் தொடரலாம் என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் விரும்பிய எந்த தீர்மானத்தையும் எடுக்கும் திறன் இருப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடப்பட்டுள்ளார்.