ஜீவன் தலைமைவில் விசேட கலந்துரையாடல்….
2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது மனித வள நிதியத்தின் முலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் கடந்த ஆண்டு இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை மலைகளில் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுப்படுபோது இளைப்பாற, உணவு உட்கொள்ள, கழிவறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கபடும் இளைப்பாறு கட்டிடத்தை விரைவாக நேர்த்தியாக விரைவாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஹட்டன், நுவரெலியா ,பதுளை, கண்டி, காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய காரியாலயங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு கடந்த அரசாங்கதால் கட்டப்பட்ட வீடுகளுற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்து மக்களுக்கு கையளிக்குமாறும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.