ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டதாம்: ஜனாதிபதி சொல்கிறார் (வீடியோ)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரண்டு வருடங்களை மீளப்பெறுவதற்கு பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தம்மிடம் யோசனை தெரிவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அப்படியானவர்கள்தான் தனக்கு ஆலோசகர்களாக இருக்க தேவையானவர்கள் என தெரிவித்த அவர் , எனது பிரச்சனைகளை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்றார்.
கண்டி தளதா மாளிகைக்கு வழிபாடு செய்ய சென்ற போதே குறித்த இளைஞன் இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் இந்த சிரமத்தை உணர்ந்துள்ளனர்.