மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்கும் தீர்மானத்துக்கு அரசாங்கமே பொறுப்பு.
இன்று முதல் அனைத்து தர மாணவர்களையும் பாடசாலைக்குத் திரும்ப அழைக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரோன் பிறழ்வின் தாக்கம் குறித்து சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,மாணவர்களை பாடசாலைகளுக்கு மீள அழைப்பது தொடர்பான தீர்மானங்கள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை களின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொழிற்சங்கம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் இன்று பாடசாலைகளுக்கு வரவழைக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒமிக்ரோன் பிறழ்வு சமூகத்தில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்கும் முடிவின் விளைவாக பிரச்சினைகள் எழுந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.