தேசிய அரசுக்கு ஐ.தே.க. பச்சைக்கொடி! – ரணில் தலைமை தாங்கவும் தயார் என அறிவிப்பு.
“நல்லெண்ண அடிப்படையில் தேசிய அரசு அமைந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசொன்றை அரசு அமைத்தால் அதற்கு எதிரணிகளின் ஒத்துழைப்பையும் பெறலாம். அவ்வாறு அமையும் தேசிய அரசுக்கு தலைமை வழங்குவதற்கு ரணில் தயாராகவே இருக்கின்றார்
பொருளாதாரப் பிரச்சினையால் நாட்டிலுள்ள வளங்களை இந்த அரசு விற்பனை செய்து வருகின்றது. அரசு வசமுள்ள தங்க இருப்பும் குறைவடைந்துள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வுகள் இவை அல்ல. உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான யோசனைகள் ஐக்கிய தேசியக்கட்சி வசம் உள்ளன” – என்றார்.